'ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால்... வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயம்!... அபராதமும் விதித்து... கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு தனி நபர் பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது என மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
இந்த இணைப்பிற்காக பலமுறை அரசு காலக்கெடு அளித்தும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பலர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், மார்ச் 31ம் தேதிதான் இறுதி நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பான் கார்டை வைத்து வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அவை முறையாகச் செயல்பட்டாலும், ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது அவசியம். மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கப்படவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், பான் கார்டும் செயலிழக்கப்பட்டுவிடும். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட பின்பே வங்கி கணக்குகள் செயல்பாட்டிற்கு வரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
