‘பிரசவத்துக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்’.. சாலையோரம் குழந்தை பெற்றெடுத்த அவலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 28, 2020 02:39 PM

மருத்துவமனைக்குள் செவிலியர்கள் அனுமதிக்காததால் கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hospital refuses to admit, pregnant woman gives birth on road in UP

உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகவே சாலையோரத்தில் துணியால் மறைத்து அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனையில் தலைமைக் கண்காணிப்பாளர், குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : #UTTARPRADESH #HOSPITAL #PREGNANT #WOMAN