‘காதலர் தினத்தில் கல்யாணம்‘... ‘11 நாட்களிலேயே’... ‘மாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்’... 'அதிர்ச்சியான இளம்பெண்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமாகி 11 நாட்களே ஆன நிலையில், டெல்லி கலவரத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவனை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஃபாக் ஹூசைன் (22) - தஸ்நீம் (20) என்ற இளம் தம்பதியினருக்கு கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் புலேந்தேஷரில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர், தம்பதிகள் இருவரும் குடும்பம் நடத்த சந்தோஷமாக டெல்லி முஸ்தாபாத் பகுதிக்கு கடந்த 25-ம் தேதி திரும்பியுள்ளனர். இந்நிலையில், எலக்ட்ரிஷீயனான ஹூசைனை எலக்ட்ரிக்கல் வேலை நிமித்தமாக யாரோ கூப்பிட அதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது தான் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ளாமலே அந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வெளியே சென்ற ஹூசைன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, டெல்லி கலவரக்காரர்களிடம் சிக்கி கழுத்தில் குத்தப்பட்ட காயங்களுடன், மார்பில் துளைத்த 3 குண்டுகள் உள்பட 5 குண்டுகளுடன் உயிரிழந்துள்ளார். அவரது வரவை எதிர்நோக்கி இருந்த மனைவி, கணவர் இறந்த அதிர்ச்சியை கேட்டு இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை. வீடு திரும்புவார் கணவர் என்று ஆசையாக எதிர்நோக்கியிருந்ததால், தனது கணவர் இறந்த செய்தியையும் நம்பவில்லை. திருமணமாகி 11 நாட்களே ஆன நிலையில் கணவரை இழந்துள்ள சம்பவத்தால், மகனை இழந்த சோகத்திலும், தனது மருமகளை நினைத்து ஹூசைனின் தந்தை மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.
இதேபோல் முகமது சாதிக் என்ற ரிக்ஷா தொழிலாளி குண்டு அடிபட்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தற்போது தான் கர்ப்பமாக உள்ளார். இதேபோல் திருமணமாகி 4 மாதங்கள், திருமணமாகி 3 மாதங்கள்தான் என புதிதாக திருமணம் ஆன 3 பேர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… என இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 38 நபர்களில் இவர்களும் அடக்கம். வன்முறை மேலும் ஏற்படாத வண்ணம் தற்போது கலவர பகுதிகளில் டெல்லி போலீசார் பேரணி நடத்தி வருகின்றனர்.
