"மு.க.ஸ்டாலினே நாளைய தமிழகத்தின் தலைவர்!!"... "சசிகலாவின் சகோதரர் அதிரடி"... "அரசியலில் பரபரப்பு!"
முகப்பு > செய்திகள் > தமிழகம்திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் நாளைய தமிழகத்தின் தலைவர் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தஞ்சாவூரில் நடந்த திருமண விழா ஒன்றில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் தற்போதைய நிலை மிக கேவலமாக உள்ளதாகவும், தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்துப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனவும், அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், அவர் தான் நாளைய தமிழகம் என்றும் கூறியுள்ளார்.
திவாகரனின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Tags : #MKSTALIN #DIWAKARAN #DMK
