‘முதல் கணவரின் மகள் பலாத்காரம்!’.. ‘2வது கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை!’.. ‘மகன், மகன்களுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாலூதியானாவில் பெண் ஒருவர் தனது மைனர் மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்த தனது இரண்டாவது கணவரின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

லூதியானாவின் மாத்புரி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 2து கணவருடன் வசித்துவந்தார். இப்பெண்ணின் முதல் கணவருக்கும் இப்பெண்ணுக்கும் 15 வயதில் ஒரு மகளும், 20 வயதில் ஒரு மகனும் இருந்தனர். அந்த 15 வயதுடைய மகளை இப்பெண்மணியின் 2வது கணவர் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து இப்பெண்மணியின் 2வது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் தன் குடும்பத்தினராலேயே பரோலில் எடுக்கப்பட்டார். ஆனால் தன்னை பலாத்காரம் செய்த தந்தை ஜாமினில் எடுக்கப்பட்டதால், அந்த 15 வயது சிறுமி 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது அடுத்த அதிரவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ஆம், மேற்கூறிய இந்த தம்பதியருக்கு 15 வயது மகளும், இரண்டு பால்ய வயது மகன்களும் உள்ளனர். இந்நிலையில், குடித்துவிட்டு வந்த இந்த நபர், தனது மகளை தனது மனைவியின் கண் முன்னாலேயே பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் தன் முதல் கணவருக்கு பிறந்த மகளை ஏற்கனவே பலி கொடுத்த அந்த தாய், இம்முறை தன் 2வது கணவருக்கு பிறந்த இந்த மகளை அந்த கணவரே பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை கண்டு அதிர்ந்தார்.
இதனால் அப்பெண்மணி, தன் மகள் மற்றும் 2 மகன்களுடன் சேர்ந்து தன் கணவரை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். இதனை அடுத்து கொலைக்குற்றத்துக்கு காரணமான பெண்மணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மகள், மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
