"உடம்பு சரியில்லாத குட்டியை .. கவ்விக்கிட்டு எமர்ஜன்ஸி வார்டுக்கே வந்துடுச்சு!".. 'தாய்ப்பூனையின்' கலங்கவைத்த 'பாசப் போராட்டம்'!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | May 03, 2020 12:47 AM

தாய்ப்பாசத்துக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை, இது உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை துருக்கியைச் சேர்ந்த பூனை ஒன்று நிகழ்த்திக் காட்டியுள்ளது.

Mother Cat brings its sick kitten to hospital pics wins internet

துருக்கியில் தாய்ப்பூனை ஒன்று தனது குட்டிப் பூனைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் தவியாய் தவித்துள்ளது. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், மனிதர்களைப் போலவே அந்த தாய்ப்பூனை தனது குழந்தை பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவு தோன்றியதுதான். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றி ட்விட்டரில் மெர்வ் ஆஸ்கன் என்பவர் பதிவிட்டிருந்தார்.

அதில், “நாங்கள் மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டில் இருந்தபோது, ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தது, நாங்கள் அந்த பூனையை நெருங்கியபோது

அது குட்டியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு பாவமாக பார்த்தது, அப்போது பரிசோதித்ததில் பூனையின் குட்டிப்பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் பூனையை மிகவும் பாசத்தோடு மருத்துவர்கள் அரவணைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.