‘நோயுற்ற 15 மாத மகள் உடன் இருக்க வேண்டிய நிர்பந்தம்’... ‘நாட்டுக்காக பணியை தொடர்ந்த மருத்துவர்’... 'கடைசியில் நடந்த துயரம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 30, 2020 11:38 AM

தனது 15 மாத குழந்தை நோயுற்று, அதன் அருகில் இருக்க வேண்டிய தேவை இருந்தும், நாட்டுக்காக கொரோனா பணியை தொடர்ந்தபோது, மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Doctor\'s fifteen month old girl dies while he was on Duty

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஓய்வு இன்றி, தங்கள் கஷ்டம் நஷ்டங்களை மறந்து மக்களுக்காக உழைத்து வருகின்றனர்.  அந்தவகையில், மத்தியப்பிரதேசத்தில், மருத்துவருக்கு நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மாநிலத்தின் ஹோஷங்கபாத் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் தேவந்திர மெஹ்ரா. இவர் இந்தூரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நோய்வாய்ப்பட்டு இருந்த பச்சிளம் மகளுடன் கூட  இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தும், கொரோனா வைரஸ் பணியால், அவரால் தனது மகளுடன் நேரத்தை கழிக்க விரும்பாமல், தனது நாட்டிற்காக கடமையை செய்ய சென்றார். 

இந்நிலையில், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதைக் கேட்டதும் மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவர் கூறும்போது,  “அவள் ஹைட்ரோசெபாலஸ் (Hydrocephalus) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இந்த இக்கட்டான நேரத்தில் எனது மகளை விட்டு பிரிய மனமில்லை. இருந்தாலும் எனது சேவை நாட்டிற்கும் தேவை என்பதால் நான் சென்றேன். தற்போது எனது மகள் இறந்துவிட்டாள். அவளை பார்ப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.’ என்று கூறியுள்ளார்.