'முதியவர் கொலையில்' தெரியவந்த அதிரவைக்கும் 'உண்மைகள்'!.. 'மகன் மற்றும் மருமகளின்' நாடகம் 'அம்பலம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 01, 2020 05:05 PM

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த 22ம் தேதி தனது தோட்டத்திலேயே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Son and daughter in law kills old man for assets

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த உசிலம்பட்டி போலீசார் கொலைக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வந்தனர்.  இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ள சம்பவம் உசிலம்பட்டியையே அதிரவைத்துள்ளது. ஆம், கொலை செய்யப்பட்டவரின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும்தான் சேர்ந்து கொலை முதியவர் ராசுவை கொலை செய்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கருப்பையாவும், தர்மாவும் தங்களது கூட்டாளியான அய்யனார் என்பவரது உதவியுடன் சொத்துக்காக தான் முதியவர் ராசுவை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளதை அடுத்து இக்கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர் மேற்கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.