‘அப்பாவ கடைசியாகக் கூட பார்க்காத முடியாத சோகம்'... ‘கலங்கவைக்கும் இளைஞரின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 13, 2020 03:43 PM

தந்தையின் முகத்தை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல், கலங்கி தவித்து வைரலாக பேசப்பட்ட இளைஞருக்கு தற்போது இனிதே திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Lino Abel who Watches Father’s Last Rites From Window, now married

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் 30 வயதான லினோ ஏபல். இவர், உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் கிடந்த தந்தையை பார்க்க, கடந்த 8-ம் தேதி கத்தாரிலிருந்து திரும்பி வந்தார். ஆனால் அப்போதுதான் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்ததால்,  மாஸ்க் அணிந்து பயணம் செய்த போதிலும் லினோவுக்கு சிறிது இருமலும் தொண்டையில் வலியும் இருந்ததால் தானாகவே முன்வந்து, விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்குச் செல்லாமல் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

முடிவுக்காக காத்திருந்தபோது, அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை, மார்ச் 9-ம் தேதி ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்தார். இத்தனைக்கும் லினோ அனுமதிக்கப்பட்டிருந்த தனிமை வார்டுக்கு எதிராக இருந்த மார்ச்சுவரியில் தந்தைக்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. பின்னர் ஆம்புலன்ஸில் தந்தையின் உடல் எடுத்துச் செல்வதை ஐன்னல் வழியாகப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். தந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் வந்த லினோ, கடைசியாகக் கூட அவரது முகத்தைப் பார்க்க முடியாததால் வேதனையடைந்தார்.

அதன்பின்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. இதையறிந்ததும், ‘அப்பாவை பார்க்க நினைத்தும் முடியாத, இந்த வருத்தம் எனக்குக் காலம் முழுவதும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்’ என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சம்பவத்திற்கு ஆதங்கம் தெரிவித்தாலும், அப்போது கேரள முதல்வர் பினராய் விஜயன், தன் முகநூல் பக்கத்தில் லினோவின் செயலைப் பாராட்டி இருந்தார்.

இந்த துயர சம்பவம் மறக்க முடியாத போதிலும், ஏற்கனவே  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததால், கடந்த 11-ம் தேதி அவருக்கும் கீத்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதில், நெருக்கமான உறவினர்கள் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலானதுடன் லினோவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இது பற்றி லினோ தன் முகநூல் பக்கத்தில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என் தந்தைக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே கத்தாரிலிருந்து வந்தேன். 

எனக்குக் காய்ச்சல் இல்லாதபோதிலும் சளியும் இருமலும் இருந்ததால் நானே மருத்துவரிடம் சென்று வெளிநாட்டிலிருந்து வந்த தகவலைச் சொன்னேன். நான் சொல்லாமல் இருந்திருந்தால் வெளியே தெரிந்திருக்காது. ஆனால் எனக்கு நோய் இருந்து, அது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே மருத்துவரிடம் சென்றேன். ஒவ்வொருவரும் இதேபோல கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும். எனக்குச் சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. நான் வெளிநாட்டிலிருந்து வந்ததால் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டேன். 

அந்தச் சமயத்தில் என் தந்தையும் அதே மருத்துவமனையில் இருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை. கடைசியாக அவர் இறந்த பின்னரும் என்னால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஜன்னல் வழியாக அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. இந்த வருத்தம் எனக்குக் காலம் முழுவதும் இருக்கும்” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ள நிலையில் கேரளா முழுவதும் லினோவின் முன் உதாரணமான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.