'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' காத்திருந்த 'ஆச்சரியம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 08, 2020 05:52 PM

சீனாவில் மகனால் உயிருடன் புதைக்கப்பட்ட தாய் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

China Woman Buried Alive By Her Son Saved After 3 Days In Grave

வடக்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது தாயை உயிருடன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அந்த நபர் கைவண்டியில் வைத்து தள்ளிச் செல்வதை அவருடைய மனைவி பார்த்துள்ளார். அதன்பிறகு 3 நாட்கள் கழித்தும் மாமியார் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தன் தாயை உயிருடன் சவக்குழிக்குள் தள்ளி மண்ணை வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் மகன் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கிய அந்த தாய் கண் விழித்து 3 நாட்களாக உதவி வேண்டி குரல் கொடுத்துக்கொண்டே காத்திருந்துள்ளார்.  

பின்னரே 3 நாட்கள் கழித்து போலீசாரால் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மீதிருந்த மண் தளர்வாக இருந்த காரணத்தால் அவர் உயிர் பிழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்க முடியாததால் இப்படி செய்ததாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.