‘வீட்டில் உடல்’.. ‘11 வயது மகளைக் கொன்று, தலையுடன் நிர்வாணமாக வலம் வந்த தாய்!’.. நடுங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 01, 2020 08:03 AM

உக்ரைன் நாட்டில் தனது 11  வயது மகளின் தலையை துண்டித்து பிளாஸ்டிக் கவரில் போட்டு நிர்வாணமாக எடுத்து வந்த தாயின் செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Mother arrested for silting her 11 year old daughter

உக்ரைனின் கார்கில் பகுதியில் தனது அண்ணன் மற்றும் தனது 11 வயது மகளான கிறிஸ்டினாவுடன் வசித்து வந்தவர் 38 வயதான டயாட்டினா. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது பிளாட்டிற்கு வெளியே உள்ள சாலையில் டயாட்டினா நிர்வாணமாக நடந்து வந்ததோடு,  துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தலையை பிளாஸ்டிக் கவர் ஒன்றையும் கையில் எடுத்து வந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டயாட்டினாவின் அண்ணன் தன் வீட்டை சென்று பார்க்கும்போது அங்கு தலையில்லாத உடல் ஒன்றையும் பார்த்து மேலும் அதிர்ந்து உள்ளார். அதன் பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் டயாட்டினாவை பிடிக்க முயன்றபோது “கிட்டே வந்தால் கத்தியால் குத்தி விடுவேன்” என்று அவர்களை விரட்டினார். எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் டயாட்டினாவை கைது செய்தனர்.

நடுங்க வைத்த இந்த சம்பவத்தை பற்றி போலீசார் விசாரித்து வரும் நிலையில், டயாட்டினா பற்றி அவரது அண்ணன் கூறும் பொழுது, “அவர் வேலைக்கு சென்று வந்தார். ஏழ்மையான நிலையிலும் சமூகத்தில் பின் தங்கி இருந்தார் என்று கூற முடியாது” என்று தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் கூறும்பொழுது, “டயாட்டினா எப்போதும் போல் இருந்தார். அவர் போதை பொருட்களுக்கோ, மதுவுக்கோ அடிமை ஆகவில்லை. பொது விடுமுறை அன்றுதான் மது அருந்துவார். அவரது மகள் கிறிஸ்டினா அழகாக இருப்பார் . வேறு என்னதான் சொல்ல?” என்றும் தெரிவித்துள்ளனர்.