'பேய் விரட்டும்' தந்தையின், 'கள்ளக்காதலி'.. 'தாய்' தீட்டிய 'கொலைத்' திட்டத்தை நிறைவேற்றிய 'மகன்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுவர்கள் இருவர், தங்களது தாய் தீட்டிக்கொடுத்த திட்டத்தின்படி, தங்களது தந்தையுடன் தவறான தொடர்பில் இருந்த பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது.

நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்கிற நபர் பேய் விரட்டும் தொழில் செய்து வந்துள்ளார். வேலை நிமித்தமாக இவர் தேனி சென்றிருந்தபோது, இவருக்கு ரத்தினம் என்கிற கைம்பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த குமாரின் மனைவி திலகம் கோபித்துக்கொண்டும் தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
இதனை அடுத்து, குமாரோ, தனது புதிய காதலி ரத்தினத்தை தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துக் கொண்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த திலகம் தனது கணவருடன் வசித்து வந்த தனது பருவ வயது மகன்கள் இருவரிடமும் செல்போனிலேயே பேசிப் பேசி, தனது கணவரும், அந்த சிறுவர்களின் தந்தையுமான குமாரின் கள்ளக்காதலி ரத்தினத்தைக் கொல்வதற்க்ய் திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளார்.
அதன்படி சிறுவர்கள், தங்களது தந்தையின் காதலியான ரத்தினம் தனியாக இருக்கும் போது கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற சிறுவர்கள் இருவரையும் அவர்களது தாயுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.
