‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 21, 2020 11:50 AM

கன்னியாகுமரி அருகே குடிபோதையில் பணம் தர மறுத்த தாயின் கழுத்தை மகன் நெரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son tries to murder his mother for refusing to give him liquor money

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ. கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில நாள்களாக மது குடித்துவிட்டு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரணத் தொகையை தாயிடம் கேட்டு வினோ தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வினோ தாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த அவரிடமிருந்து தாயை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின்போது வினோ மதுக்குடித்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிக்க பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: News7