'சரக்குக்கு ஆசைப்பட்டு பெத்த மகளையே...' 'வயசான நண்பருக்கு கட்டி கொடுத்த அப்பா...' மூணே நாளில் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 05, 2020 09:49 AM

தந்தையின் நண்பனுக்கே தன்னை திருமணம் செய்து கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friend married his daughter to an elderly friend for Alcohol

சாந்தகுமார் தனது 2 மகள்கள் ஒரு மகன் உடன் வேலூர் மாவட்டம் அடுத்த வடுகந்தாங்கல் EB காலனியில் வசித்து வருகிறார். குடி போதைக்கு அடிமையான தந்தையுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் தன் தாயை இழந்துள்ளனர்.

வறுமையில் இருக்கும் சாந்தகுமாருக்கு அவரது நண்பர் சங்கர் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார். மேலும் ஒன்றாக சேர்ந்து குடிப்பது, மது வாங்கி தருவது என்று இருந்துள்ளார். தனக்கு உதவி செய்யும் நண்பனுக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்று நினைத்த சாந்தகுமார் தனது மகளை சங்கருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகள் மகாலட்சுமியின் சம்மதம் இன்றி, கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி விரிஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் நடத்தியுள்ளார் சாந்தகுமார். தனது தந்தை வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் மனம் உடைந்துள்ளார் மகாலக்ஷ்மி.

திருமணம் ஆகி மூன்று நாட்கள் சடக்கிற்காக அப்பா வீட்டில் இருந்த மகாலட்சுமி நான்காம் நாள் சங்கரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே மனம் வெறுத்து கடும் மன உளைச்சலில் இருந்த மகாலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கடந்த மே 1-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாலட்சுமி.

வெளியே சென்று வீட்டிற்கு வந்த சங்கர், தன் மனைவி மகாலட்சுமி தூக்கில் தொங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனே போலீசாருக்கு தகவலும் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகாலட்சுமி உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் விருப்பத்தை மீறி தன்னை விட அதிக வயதுடையவருக்கு திருமணம் செய்து வைத்ததால் தற்போது ஒரு உயிர் இவ்வுலகத்தை விட்டு நீங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.