பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து... 'துப்பாக்கி முனையில்' பிணையக் கைதிகளாக 'சிறைப்பிடித்த' கொடூரன்... போலீசார் மீதும் 'குண்டு வீச்சு'... 'உ.பி.யில் பயங்கரம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 31, 2020 07:05 AM

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பதாம் என்பவர் தனது குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்து 20க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்து போலீசாரை மிரட்டி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In U.P. a Prisoner Detained the more then 20 hostage

சுபாஷ் பதாம் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சொந்த கிராமத்திற்கு சென்ற சுபாஷ், தனது ஒரு வயது குழந்தை பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வருமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 15 குழந்தைகள், மற்றும் சில பெண்கள் என 20-க்கும் மேற்பட்டோர் சுபாஷ் பதால் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது திடீரென வீட்டுக்கதவை உள்புறமாக தாழிட்டு துப்பாக்கி முனையில் தனது மனைவி, குழந்தை மற்றும் பிற குழந்தைகள், பெண்கள் அனைவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் 3 போலீசார் மற்றும் கிராமவாசிகள் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து கொலை குற்றவாளியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிணை கைதியாக உள்ளவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர. தற்போது வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #UTTARPRADESH #HOSTAGE #PRISONER #DETAINED #20 PEOPLE #INTIMIDATED POLICE