'நான் நாலு மணிக்கே எந்திரிச்சு சமைச்சு' ... 'நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சொல்லும்' ... ஒரு 'டிரைவர்' குடும்பத்தின் நெகிழ்ச்சியான 'குட்டி ஸ்டோரி' வீடியோ !
முகப்பு > செய்திகள் > இந்தியா'கில்லி' உட்பட தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வெளியிட்ட ஒரு டிரைவரின் குடும்பத்தை குறித்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது நண்பர் ஒருவருடன் காலை ஆறு மணியளவில் மும்பையிலிருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் வண்டியை ஓட்டி சென்ற டிரைவர், 'என்னுடைய போன் பேட்டரி காலியாகி விட்டது. உங்களது போனை பயன்படுத்திக் கொள்ளவா' எனக் கேட்டுள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தியின் நண்பரும் அந்த டிரைவரிடம் போனை கொடுக்க தனது மகளுக்கு அழைத்த டிரைவர் போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டுள்ளார். மறுமுனையில் பேசிய டிரைவரின் மகள் தன்னை ஐந்து மணிக்கு அழைக்க சொன்னதற்கு எப்போது என்னை அழைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட டிரைவர் சற்று தடுமாற்றத்துடன், 'அது பரவாயில்ல மா. இப்போ எழுந்து போய் சமைச்சிட்டு ஸ்கூலுக்கு கெளம்பு' என்றார். 'அப்பா நான் 4 மணிக்கே எந்திருச்சு சமைச்சு ஸ்கூலுக்கு கெளம்பிட்டு இருக்கேன்' என மகள் கூற தந்தை - மகள் உரையாடலை ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு, இது குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி டிரைவரிடம் கேட்கையில் அதற்கு பதிலளித்த டிரைவர், 'எனது மனைவி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து விட்டார். எனது 12 வயது மகளும், 7 வயது மகனும் மட்டுமே வீட்டில் உள்ளனர்' என கூற உடனடியாக இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வீடியோ மூலமாக தனது கருத்துடன் ஆஷிஷ் வித்யார்த்தி பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
