'இத்தாலி'யிலிருந்து 'கேரளா' வந்து ... ஒரே குடும்பத்தை தாக்கிய 'கொரோனா' ... இந்தியாவில் அதிகரித்த எண்ணிக்கை
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த ஓர் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டை பகுதியை சேர்ந்த தந்தை, தாய், குழந்தை மற்றும் அவருடைய உறவினர்கள் இரண்டு பேர் உட்பட ஐந்து பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இவர்கள் ஐந்து பேரும் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் இறுதியில் இந்தியா வந்ததாக கேரள சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் கொரோனா வைரஸ் இருக்கும் போது அதிகம் பேருடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
