‘3 முறை கத்தியால குத்துனாங்க’.. ‘இளைஞர் சொன்னதை நம்பி சிசிடிவியை பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 10, 2020 10:31 AM

கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு தேயிலைத் தோட்ட வேலைக்கு வடமாநில இளைஞர்கள் அதிகமாக வருவதுண்டு. வாரசந்தை விடுமுறை நாளான நேற்று இளைஞர் ஒருவர் சந்தைக்கு செல்ன்றபோது, வயிற்றில் கத்திக்குத்து பட்டதாகவும், அந்த காயத்துடன் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

drunken northist man stabbed himself in valparai kovai

இது குறித்து பாதிக்கப்பட்ட நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது முகம் தெரியாத ஒருவர் தன்னை வயிற்றில் கத்தியால் குத்தியதாக அந்த நபர் தெரிவித்திருந்தார். காயமடைந்தவரின் பெயர் கோபால் பங்கட் என்பதும் அவர் அருகிலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் தோட்ட வேலை செய்து வந்ததாகவும் தெரிய வந்தது. அவருக்கு வால்பாறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே கோபால் பங்கட் கூறியபடி சிசிடிவி காட்சிகளை வால்பாறை போலீஸார் சோதனை செய்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த சம்பவம் மிரள வைத்தது. அதில் சாலையோர கடை ஒன்றில் இருந்து கத்தியை வாங்குவதுபோல் வாங்கி பார்த்த கோபால் பங்கட், பின்னர் மூன்று முறை தன் வயிற்றில் தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்ட கொடூரமான காட்சி பதிவாகியிருந்தது. குடிபோதையில் கோபால் பங்கட் தன்னைத் தானே, கத்தியால் குத்திக் கொண்டதும், ஆனால் யாரோ ஒருவர் கத்தியால் குத்தி விட்டதாக போலீஸாரிடம் கூறி வந்ததும் அப்போதுதான் போலீசாருக்கு தெரியவந்தது.

Tags : #CCTV #POLICE #DRUNKEN