இன்னும் 'கொரோனாவுக்கே' ஒரு 'தீர்வு' கிடைக்கல... அதுக்குள்ள 'பறவைக்' காய்ச்சல் சீசனா?... கொஞ்சம் 'கேப்பு' விடுங்கப்பா...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 09, 2020 09:53 PM

கொரோனா பீதியே இன்னும்  அடங்காத நிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளதால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Bird flu, spread in Kerala - tamilnadu border alert position

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் திடீரென மடிந்து விழத் தொடங்கின. இதையடுத்து கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், பறவைக்காய்ச்சலைத் தடுக்க கேரள அரசு முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. உயிரிழந்த கோழிகள் குழிதொண்டி புதைத்து வருகின்றனர். கோழிப்பண்ணைகள் இருக்கும் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப்பகுதியான படந்தாலுமூடு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தமிழக கால்நடைத் துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags : #BIRD FLU #KERALA #TAMILNADU #BORDER POSITION #CORONA