இந்த ரெண்டு மாநிலத்துல மட்டும் 600 ‘பச்சிளம்’ குழந்தைகள் பலி..! ‘அதுவும் 1 மாசத்துல’.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jan 06, 2020 04:54 PM
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சுமார் 100 குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் உயிரிழந்துள்ளன.
இதேபோல ஜோத்ப்பூரில் உள்ள உமைர், எம்.டி.எம் மருத்துவமனையில் 150 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் பிட்னர் பகுதியில் உள்ள பி.பி.எம் மருத்துவமனையில் 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 140-ஐ தாண்டியுள்ளது. அகமதாபாத்தில் 85 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 600-க்கும் அதிகமான குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.