‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 03, 2020 03:01 PM

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore woman dies after delivery, relatives protest

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரது மனைவி பிரியா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியாவை பிரசவத்துக்குக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் சாதாரண வார்டுக்கு பிரியா மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக அவர் சுயநினைவின்றி இருந்ததைப் பார்த்து, அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அங்கு பிரியாவின் வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட துணி வயிற்றின் உள்ளே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #PROTEST #CUDDALORE #PREGNANT #WOMAN #DIES #HOSPITAL