''தப்பிச்சு ஓட பாக்கறியா நீ ..? 'எங்க' போனாலும் 'உன்ன' விட மாட்டேன்..! பாம்புடன் மல்லுக்கட்டிய ஆசாமி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 04, 2020 04:45 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் போதை ஆசாமி ஒருவர் பாம்பை வம்பிற்கு இழுத்து சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Are you running away? Wherever you go with the

ராஜஸ்தான் மாநிலம் தவ்சா பகுதியில் ஒருவர் குடிபோதையில் வழியருகே சென்ற கருநாகத்திடம் வம்பிழுத்தார். வம்புக்கு இழுத்தவரை கருநாகம் சரமாரியாக கொத்தியது. போதையில் நிதானம் தவறிய இந்த நபர், தனக்கு எதிரே படம் எடுத்து சீறும் கருநாகத்திடம் பேசி சண்டை போட்டார்.

மேலும் அது எங்கும் தப்பி போகாமல் "உன்ன எங்க போனாலும் விட மாட்டேன்.. தப்பிச்சு ஓட பாக்கறியா.." என்று துரத்தி துரத்தி வம்புக்கு இழுத்தார். இந்த கலாட்டாவில், பாம்பு மேலும் அந்த போதை ஆசாமியை பலமுறை கொத்தியது. ஆயினும் அவர் விடவில்லை. இறுதியில் களைப்படைந்த பாம்பு சுருண்டது.

குடிபோதை ஆசாமியை பாம்பிடம் இருந்தும், பாம்பை அவரிடம் இருந்தும் மீட்க பொதுமக்கள் நீண்ட நேரம் முயன்றும் பயனளிக்கவில்லை. இறுதியாக பாம்பு இறந்தவுடன் அந்த நபரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : #SNAKE #ALCHOCOLIC #RAJASTHAN