‘ரெண்டு நாளாச்சு’!.. ‘விறகு எடுக்க போனவரு வீடு திரும்பல’.. காட்டுக்குள் முதியவருக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 27, 2019 05:35 PM

வயநாடு அருகே காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்ற முதியவர் புலி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kerala old man killed in tiger attack at forest

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வடக்கன்நாடு பகுதி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜடையன் (60). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சமையலுக்கு விறகு சேகரிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜடையன் வீடு திரும்பாததால் ஊர்மக்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

இதனை அடுத்து வனப்பகுதியில் சிதைந்த நிலையில் ஆணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே வனத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு காணாமல் போன ஜடையன் உடல் பாகங்களை புலி தின்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் அடுத்த தாக்குதல் நடைபெறுவதற்குள் புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விறகு சேகரிக்க சென்றவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: VIDEO: ‘நைசா பதுங்கி பாய்ந்த புலி’!.. ‘மிரண்டு போன பையன்’!.. ‘கடைசியில் நடந்த டுவிஸ்ட்’.. வைரல் வீடியோ..!

Tags : #KERALA #TIGER #ATTACKS #OLDMAN #DIES