‘வயசு 26 ஆச்சு’!.. ‘ஆனா இன்னும் கல்யாணம் ஆகல’!.. மனவருத்தத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 12, 2019 03:08 PM

கல்யாணம் ஆகாத மனவருத்தத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad man commits suicide for not getting married

ஹைதராபாத் பாரூக் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது ஷரஃப் (26). இவர் பவுன்சர் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களாக முகமது ஷரஃப் மனவருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தனக்கு கல்யாண வயது வந்தும் இன்னும் கல்யாணாம் ஆகவில்லையே என்ற வருத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனது அறையில் இருந்து வெகுநேரமாக ஷெரிஃப் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அறை கதவை தட்டியுள்ளனர். ஆனால் எந்த பதிலும் வரததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் ஷெரிஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் ஷெரிஃப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கல்யாணம் ஆகாத மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டாரா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #HYDERABAD #MARRIAGE #DIES