‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’!.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’!.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 30, 2019 11:34 AM

கடும் பனிமூட்டம் காரணமாக கார் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.

6 dead after car falls into canal near Delhi due to fog

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் 11 பேருடன் கார் ஒன்று வந்துள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால் டாங்கர் என்ற இடத்தில் உள்ள கெர்லி என்ற கால்வாயில் கார் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மீதி 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனி நிலவி வருவதால் சாலைகளில் காட்சித் திறன் குறைந்து இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #DIES #CAR #FOG #DELHI