‘உடம்பு சரியில்லனு மெடிக்கலில் ஊசி போட்ட பெண்’!.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்’!.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 30, 2019 10:48 AM

மெடிக்கலில் ஊசி போட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Perambalur woman dies after taking injection in medical shop

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். இவர் அப்பகுதியில் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வருபவர்களுக்கு ஊசி போட்டும், மாத்திரை கொடுத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத சிறுகுடல் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (35) என்ற பெண் மெடிக்கல் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு தமிழ்செல்வியை பரிசோதித்துப் பார்த்த கதிரவன், அவரது கை நரம்பில் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்தில் தமிழ்செல்வி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வியின் உறவினர்கள் கதிரவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தமிழ்செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக கதிரவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்செல்விக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #PERAMBALUR #WOMAN #DIES #INJECTION #MEDICAL