‘கர்ப்பமா இருக்கேன்’!.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’!.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 25, 2019 01:02 PM

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டுக்கு வர மறுத்த கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur man commits suicide after cut off pregnant wife\'s neck

பண்ருட்டி அருகே உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது மனைவி மற்றும் மகள் சித்ராவுடன் (23) பல்லடம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அதே நூற்பாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹென்றி என்பவர் வேலை பார்த்துள்ளார். அப்போது சித்ராவும், ஹென்றிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இருவரும் அதே பகுதியில் வீடு எடுத்து தனிகுடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே சித்ரா கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது ஊரில் கொண்டாட வேண்டும் என தனது மனைவியை ஹென்றி அழைத்துள்ளார். ஆனால் கர்ப்பமாக உள்ள சமயத்தில் பயணம் வேண்டாம் என சித்ராவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில தினங்களாக தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயம் மீண்டும் சித்ராவை ஊருக்கு அழைத்துள்ளார். அதற்கு ‘நான் கர்ப்பமா இருக்கேன். இப்போ எப்படி ட்ராவல் பண்ணறது? வேண்டாம்’ என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி காய்கறி நறுக்கும் கத்தியால் சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சித்ரா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். மனைவியை இப்படி செய்துவிட்டோமே என்ற பயத்தில் மனைவியின் சேலையில் ஹென்றி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சித்ரா, காயத்துடன் தனது கணவரை தேடியுள்ளார். அப்போது ஹென்றி தூக்கிட்டுருப்பதைக் கண்டு அலறியுள்ளார். சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் ஹென்றி பரிதாபமாக உயிரிழந்தார். சித்ராவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #HUSBANDANDWIFE #TIRUPUR #PREGNANT #DIES