‘மொட்டை மாடியில் சூதாட்டம்’!.. ‘ரெய்டு சென்ற போலீஸ்’!..‘மாடியில் இருந்து குதித்த நபர்’.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 25, 2019 02:44 PM

சென்னையில் சூதாட்டம் தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையின் போது மாடியில் இருந்து குதித்த நபர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 arrested for gambling at private terrace in Chennai

சென்னை கொடுங்கையூர் அருகே கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள ஒரு கம்பெனியின் மொட்டை மாடியில் அனுமதியின்றி சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்த சென்றுள்ளனர். போலீசார் வரும் தகவலறிந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் மாடியில் இருந்து அடுத்த கட்டிடத்துக்கு குதித்த போது ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை உடைந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #CHENNAI #GAMBLING #TERRACE #ARRESTED #DIES