‘3 மாத கர்ப்பம்’!.. ‘திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணி’.. கல்யாணமான 6 மாதத்தில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 10, 2019 04:22 PM

பூந்தமல்லி அருகே பாம்பு கடித்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant woman dies from snake bite in Chennai

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் (27). இவரது மனைவி புஷ்பா (22). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புஷ்பா கர்ப்பம் தரித்துள்ளார். நேற்றிரவு கண்ணப்பன் வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே புஷ்பா நின்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் பாம்பு கடித்து புஷ்பா இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஆறே மாதத்தில் கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #PREGNANT #WOMAN #SNAKE #DIES