'உங்களுக்கு 50 பைசா பாக்கி இருக்கு'...'பிரபல வங்கி எடுத்த அதிரடி'...அதிர்ந்து நின்ற கஸ்டமர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 16, 2019 11:16 AM

50 பைசா நிலுவை தொகையினை கட்ட தவறியதால்,  சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajasthan: SBI sends notice to man demanding repayment of 50 paise due

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார், ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளார். இதனிடையே ஜிதேந்திர குமாருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதனை கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த நோட்டீஸில் ''வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையான 50 பைசாவை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 பைசா கடனை ஜிதேந்திர குமாரின் தந்தை வங்கியில் செலுத்த சென்றுள்ளார். ஆனால் அந்த தொகையினை பெற வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ஜிதேந்திர குமாரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SBI #RAJASTHAN #50 PAISE DUE #REPAY