‘டிராக்டரை முந்திய டிப்பர் லாரி’!.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’! கைக்குழந்தையுடன் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 11, 2019 02:39 PM

இருசக்கர வாகனம் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Lorry and bike accident near Veerapandi in Theni

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் 1 வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உப்பார்பட்டி விளக்கு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிராக்டரை முந்திக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத வேல்முருகன் உடனே பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனம், சாலையில் சரிந்தபடியே லாரி டயருக்கு அடியில் சிக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மாரியம்மாளுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #THENI #LORRY #BIKE #DIES