‘நாலாவதும் பெண் குழந்தையா’!.. ‘முதல் 3 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளிய தந்தை’!.. அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 19, 2019 09:31 AM

நான்காவதும் பெண் குழந்தை பிறந்த விரக்தியில் முதல் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat man kills 3 daughters after birth of fourth girl

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கம்பாலியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷிக் சோலங்கி (35). கூலி வேலை செய்து வரும் இவருக்கு அஞ்சலி (7), ரியா (5), ஜல்பா (3) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் அவரது மனைவி நான்காவதாக கர்ப்பம் தரித்தார். இதனை அடுத்து அவருக்கு நடந்த பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதில் விரக்தி அடைந்த சோலங்கி தனது மூன்று பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, வீட்டின் முன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், தன்னுடைய மனைவி நான்காவதாகவும் பெண் குழந்தையை பெற்றதால் சோலங்கி விரக்தியில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அதிக கடன் சுமை இருந்ததாகவும் கூறினர். முதற்கட்ட விசாரணையில் தனது குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தள்ளியது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சோலங்கியின் மனைவி, பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : #CRIME #MURDER #FATHER #CHILD #GUJARAT #DAUGHTERS