‘மாட்டுக்கு தண்ணி வைக்க போனாங்க’! ‘ஆனா இப்டி நடக்கும்னு நெனைக்கலையே’! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 12, 2019 12:54 PM

மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Woman dies for current shock when she try to give water to cow

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (40). கணவரை இழந்த இவர் மேட்டுப்பாளையம் அருகே தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். அங்கு கறைவை மாடுகளை வைத்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக வீட்டின் முன் இருந்த அன்னக்கூடையை அவர் எடுத்துள்ளார்.

அப்போது அந்த பாத்திரத்தில் வீட்டில் இருந்து வரும் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனைக் கவனிக்காத ஜோதி அன்னக்கூடையை எடுத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக இறந்துள்ளார். அந்த வழியாக சென்ற உறவினர்கள் ஜோதி மயங்கி கிடந்ததை பார்த்து அருகில் சென்றுள்ளனர்.

அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பியுள்ளனர். மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DIES #WOMAN #COW #ARIYALUR #TAMILNADU