‘திடீரென எழும்பிய ராட்ஷத அலை’!.. நண்பர்கள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்..! அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 15, 2019 09:45 AM

பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College student dies after bathing with friends at Poompuhar Sea

சீர்காழி அருகே உள்ள பூம்புகார் சுற்றுலா தலத்தை சுற்றிப்பார்க்க அண்ணாமலை பல்கலைகழக வேளாண்மைத்துறை மாணவர்கள் சிலர் சென்றுள்ளனர். சுற்றுத்தலங்களை சுற்றிப் பார்த்தபின் அனைவரும் கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென எழும்பிய ராட்ஷத அலையில் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் குபேரன் (20) என்பவர் சிக்கியுள்ளார்.

இதனைப் பார்த்த சக நண்பர்கள் நீண்ட நேரம் போராடி குபேரனை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் மாணவரை சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் இறங்கி குளிப்பது ஆபத்து என அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும் சுற்றுலா பயணிகள் பொருட்படுத்துவதில்லை என்றும், இதனால் இப்பகுதியில் பல உயிரிழப்புகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நண்பர்கள் கண்முன்னே சக மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #COLLEGESTUDENT #POOMPUHAR #SEA #DIES