“HIV-யால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு.. ரயில் கம்பார்ட்மெண்ட்டில் இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!”
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்னா-பாபுவா இண்டன்சிட்டி ரயிலில் கூட்டமில்லாத கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்துவந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அதே கம்பார்ட்மெண்ட்டில் வைத்து, 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

கயா பகுதியின் கைமூர் என்கிற ஸ்டேஷனில் ஏறிய எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண் ஒருவர் தன்னந்தனியாக கடைசி கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்வதை பார்த்த இளைஞர்கள், 4 பேர், தாங்கள் இறங்க வேண்டிய சந்திப்பு வந்தும் இறங்காமல், அந்த கம்பார்ட்மெண்ட்டிலேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்துள்ளனர்.
ரயில் பாபுவா சாலை ஸ்டேஷனை அடைந்தபோது எப்போதும் போல கம்பார்ட்மெண்ட்டை பரிசோதனை செய்வதற்காக, காவலர் ஒருவர் கதவைத் திறக்க, அங்குதான் இந்த இளைஞர்கள் அப்பெண்ணை பலாத்காரம் செய்துகொண்டிருந்துள்ளனர். இன்னும் 2 பேர் அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.
காவலரைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓட, வீரேந்திர பிரகாஷ் சிங், தீபக் சிங் என்கிற 2 பேரை பிடித்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்ட பெண், தான் மணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், கயா எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்துக்கு வந்ததாகவும், திரும்பி வரும்போது இப்படி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அப்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
