'தனியாக இருந்த இளம்பெண்'... 'கன்னத்தில் கீறல்!'... 'சிவந்த நிலையில் கழுத்து!!'... 'காஞ்சிபுரத்தில் பயங்கரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 22, 2020 07:00 PM

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் உடல் மற்றும் கன்னத்தில் கீறல்கள் இருந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

young woman dies suspiciously near kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயுள்ள ஆதனஞ்சேரி பெரியார் தெருவில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி மற்றும் ரஞ்சிதா என இரு பெண்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று ரஞ்சிதா மட்டும் வேலைக்குச் சென்றுள்ளார்.

ரஞ்சிதா வேலை முடிந்த பின், மாலை வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த சமயம், தூங்கிய நிலையில் இருந்த கரீனாவைத் தட்டி எழுப்ப ரஞ்சிதா முயற்சி செய்துள்ளார். எவ்வளவோ முயற்சி செய்தும், கரீனா கண் விழிக்காததால், அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கே, கரீனாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்த பெண்ணின் உடல் மற்றும் கன்னத்தில் கீறல்கள் இருப்பதாகவும், கழுத்து சிவந்த நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவரை கரீனா காதலித்து வந்ததாகவும், அவர் இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Tags : #CRIME #WOMAN #ODISHA