புத்தாண்டைக் ‘கொண்டாட’ சென்ற இடத்தில்... ‘காணாமல்’ போன ‘பேக்’... ‘அடுத்தடுத்து’ பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 21, 2020 10:50 AM

சுற்றுலா சென்ற இடத்தில் இந்திய பெண்ணிடமிருந்து திருடப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலிருந்து ஓடிபி, பின் நம்பர் என எதுவுமே இல்லாமல் ரூ 1.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

Hackers Steal Rs 1.5 Lakh From Noida Womans Card Without OTP PIN

நொய்டாவைச் சேர்ந்த நேகா சந்திரா என்பவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிசுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது அவருடைய பை திருடப்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்களிலேயே 3 தவணையாக அவருடைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலிருந்து ரூ 1.5 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் ஓடிபி, பின் நம்பர் என எதுவுமே இல்லாமல் வங்கிக் கணக்கினை ஹேக் செய்து பணத்தை எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேகா சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #CRIME #MONEY #WOMAN #CREDITCARD #DEBITCARD