வீட்டுக்குள் நுழைந்து... அடையாளம் தெரியாதப் பெண் செய்த வேலையால்... ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 23, 2020 10:36 AM

திண்டிவனம் அருகே வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடியதாகக் கூறப்படும் பெண்ணை, ஊர்மக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

Woman beaten up by Villagers due to allegations of steal

திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் மற்றும் அயனாவரம் பகுதிகளில் அடுத்தடுத்து 5 வீடுகளில் பணம், நகை திருடுப் போனதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியனர்,  காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இருப்பினும் ஊருக்குள் வந்து செல்லும் புதிய நபர்களை அப்பகுதி மக்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாதப் பெண் ஒருவர், அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்ப முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள், தப்ப முயன்றப் பெண்ணை சுற்றி நின்று சரமாரியாகத் தாக்கினர்.

பிடிபட்ட பெண்ணின் முகத்தில் ரத்தம் வழிய அங்கிருந்த பெண்கள் மிகவும் பயங்கரமாகத் தாக்கிய நிலையில், சுற்றி நின்றிருந்த ஆண்களில் சிலர் இரக்கமின்றி ‘கையை உடை, காலை உடை’ எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சந்தேகத்திற்கிடமான இதுபோன்ற சமயங்களில் பிடிபடும் நபர்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், ஊர்மக்களே சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். 

Tags : #STEAL #WOMAN