அய்யோ... என்ன விட்ருங்க' யாரோ என் காலை புடிச்சி இழுக்குறாங்க...! 'சாப்பிட்டால் வாந்தி வருவதாக சொன்ன சிறுவனை அங்கையே...' பேயோட்டிய சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 29, 2020 02:18 PM

பேய் பிடித்ததாக கூறி பெற்றோரை ஏமாற்றி, பள்ளிக்கு செல்லாமல் ஏமாற்றி வந்த சிறுவன் பேயோட்டும் பெண்மணியிடம் மாட்டிக்கொண்டு திருட்டு முழி முழித்துள்ளான்.

The boy who cheated his parents by haunting him

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன் சாப்பிட விடாமல் யாரோ தடுப்பதாகவும், தன் முன் நிழல் போன்ற உருவம் வந்து பயமுறுத்துவதாகவும் பெற்றோரிடமும் கூறி வந்துள்ளான். மேலும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் போது தன்னுடைய காலை யாரோ பிடித்து இழுக்கிறார்கள் என்றும், எனவே பள்ளிக்கு போக மாட்டேன் என்றும் அவன் வீட்டில் அழுதுள்ளான்.

இந்த பிரச்சனைக்காக சிறுவனின் பெற்றோர் பல மருத்துவர்களை அணுகியும் சிறுவனின் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் மிகவும் நொந்து போன அவர்கள் வேறு வழியின்றி சேலம் கன்னக்குறிச்சி பகுதியில் அருள் வாக்கு சொல்லும் திருநங்கையிடம் அழைத்து சென்றுள்ளனர். சிறுவனிடம் பேச்சு கொடுத்த அவர், சில நிமிடங்களில் அவன் பொய் சொல்வதை புரிந்து கொண்டு சிரித்த படி விசாரிக்க தொடங்க, சிறுவன் தன் மழலை மொழியில் பேசி சமாளிக்க முயற்சிக்க சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க தொடங்கினர்.

சிறுவனின் தாயையை வெளியே அனுப்பிவிட்டு சிறுவனை செல்லமாக கண்டித்த திருநங்கை, பொய் சொல்லி ஏமாற்றினால் காளியம்மன் சும்மா விடமாட்டாள் என்றார். சாப்பிட்டால் வாந்தி வருவதாக ஏமாற்றி வந்த சிறுவனுக்கு அங்கேயே சாப்பிட வைத்து அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

சிறுவனுக்கு அறிவுரை கூறிய இந்த திருநங்கை தான் கடந்த சில மாதங்களுக்கு முன், காதலை மறைக்க பேய் நாடகம் போட்ட இளம்பெண்ணை பிரம்பால் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MYSTREIOUS