“மகனின் கண்முன்னே”.. “தாயை பலாத்காரம் செய்த.. பழைய காதலன்!”.. அதன் பிறகு செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 21, 2020 06:12 PM

குஜராத்தின் வதோதரா பகுதியில் உள்ள தபோய் டவுனில் 27 வயது திருமணமான பெண் ஒருவரை, அவரது பழைய காதலர், தன்னை சந்திக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். 

married woman assaulted, abused by ex lover in front of her son

ஆனால் முதலில் மறுத்த அப்பெண்ணை, அவரது காதலர் மிரட்டவே அவர் பயந்துபோய், பழைய காதலனை பார்க்கச் சென்றுள்ளார். ஆனாலும் பழைய காதலன் வன்முறையுடன் நடந்துகொண்டுவிடக் கூடாது என்பதற்காக, தனது மகனையும் இப்பெண் கூடவே கூட்டிச் சென்றுள்ளார்.

ஆளரவம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் அருகே, பழைய காதலனை சந்தித்த அப்பெண்ணை, அந்த நபர் பலவந்தமாக தூக்கிச் சென்று மகனின் கண் முன்னேயே வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அப்பெண் கதறிக் கூச்சலிட்டு கத்தியுள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லை என்பதால் காப்பாற்றவும் யாரும் வரவில்லை.

தவிர, அந்த நபரின் பலவந்தத்துக்கு இணங்க மறுத்துள்ளார் அப்பெண். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கத்தியை எடுத்து அப்பெண்ணின் அந்தரங்க பாகங்களை சிதைத்துள்ளார். பின்னர், தாய், மகன் இருவரையும் மெடிக்கலுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் அனுமதித்து விடுவித்துள்ளார். அங்கிருந்து தன் மகனுடன் தப்பி வந்த அப்பெண், தனது கணவரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை பதறவைத்துள்ளது.

Tags : #WOMAN #LOVER #GUJARAT