'இந்த பாடத்தை இப்படி தான் எடுக்கணும்'...'டீச்சரின் மாஸ் ஐடியா'...வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Dec 28, 2019 09:51 AM

உடல் உறுப்பு பற்றிய வகுப்பிற்காக, தன்னுடைய உடலில் உடல் உறுப்புகளை விளக்கும் உடை அணிந்து பாடம் எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Teacher uses her own body to teach anatomy class goes viral

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வெரோனிகா டக்கீ. இவர் கடந்த 15 வருடங்களாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்  உடல் உறுப்புகளை குறித்து பாடம் எடுக்கும் போது, அதனை குறிக்கும் வகையில்  அமைந்துள்ள உடையை அணிந்து கொண்டு பாடம் எடுக்கிறார். உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தத்ரூபமாகக் காட்டி விளக்கமாக பாடம் எடுக்கும் ஆசிரியை வெரோனிகாவின் இந்த முயற்சி மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், ''உடல் உறுப்பு ஆடையை அணிந்து பாடம் எடுக்கும்போது மாணவர்கள் அந்த உறுப்புகள் எங்கு அமைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவும், மனதில் பதியவும் எளிமையாக உள்ளது. கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கும், படிப்பில் விளையாட்டை இருக்கும் மாணவர்களுக்கும் இது எளிதாக மனதில் பதிந்து விடும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது முழு பங்களிப்பை வகுப்பில் அளிக்க முடியும்'' என கூறியுள்ளார்.

ஆசிரியையின் இந்த முயற்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக, பலரும் ஆசிரியை வெரோனிகாவை   பாராட்டி வருகிறார்கள். இதுபோன்ற ஆசிரியர்களே மாணவர்களின் நம்பிக்கையாக திகழ்வதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Tags : #SCHOOLSTUDENT #ANATOMY CLASS #HUMAN ANATOMY #TEACHER #BODY