உள்ளாட்சித் தேர்தல் அப்டேட்: திமுக, அதிமுக நிலவரம்... அ.ம.மு.க, நாம் தமிழரின் நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 02, 2020 04:30 PM

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்  ஒரு மணி நிலவரப்படி தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது.

tamilnadu local body election counting updates dmk admk

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது. முதற்கட்ட தேர்தலில், 76.19 சதவிகித வாக்குகள் பதிவானது. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2,30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில், அதிமுக கூட்டணி 137 இடங்களிலும், திமுக கூட்டணி 132 இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.

இதேபோல், 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான போட்டியில், அதிமுக கூட்டணி 643 இடங்களிலும், திமுக கூட்டணி 546 இடங்களிலும்,முன்னிலை வகிக்கிறது. சில இடங்களில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி எங்கும் முன்னிலையில் உள்ளது.

Tags : #LOCAL #BODY #ELECTION #TAMILNADU