‘காதலனுடன்’ வெளியே சென்ற இளம்பெண்... பெற்றோரிடம் இருந்து ‘தப்பிக்க’ செய்த ‘பகீர்’ காரியம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 26, 2019 12:13 AM

காதலனுடன் வெளியே சென்ற இளம்பெண் பெற்றோரிடம் இருந்து தப்பிக்க செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 Year Old Girl Fakes Kidnapping For Trip With Lover In Nagpur

நாக்பூரில் கடந்த திங்கட்கிழமை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இளம்பெண் ஒருவரும், அவருடைய பெற்றோரும் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகாரில், தங்கள் மகள் கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் காரில் வந்த 4 பேர் அவரைக் கடத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து அவர் தப்பி வந்துள்ளதாகவும், கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், அந்தப் பெண்ணை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர் எப்படி கடத்தப்பட்டார் என போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் கல்லூரி முடிந்ததும் ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரி முடிந்து காதலனுடன் வெளியே சென்ற அந்தப் பெண் வீடு திரும்ப தாமதமானதால் பெற்றோரிடமிருந்து தப்பிக்க தான் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடைய பொய்யைக் கேட்டு பெற்றோர் எச்சரிக்கை செய்து விட்டுவிடுவார்கள் என நினைத்ததாகவும், அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் மாட்டிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு போலீசாரும், அந்தப் பெண்ணின் பெற்றோரும் அதிர்ந்து போயுள்ளனர்.

Tags : #GIRL #LOVER #KIDNAP