உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் குழந்தைகள்... ஏரியில் குளிக்கப் போய்... சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 27, 2019 03:52 PM
உறவினர் வீட்டில் விட்டு செல்லப்பட்ட பெண் குழந்தைகள் ஏரியில் குளிக்கபோய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது மனைவியுடன் வெளியூர் செல்ல நினைத்தார். இதனால், அருகில் உள்ள உறனரின் வீட்டில் 2 மகள்களையும் விட்டு சென்றார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த ஏரியில் உள்ள குட்டையில் 2 பெண் குழந்தைகளும் குளிக்கச் சென்றுள்ளனர். வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் குட்டைக்கு சென்று பார்த்தப்போது, குழந்தைகள் இவருரின் ஆடைகள் மட்டும் கரையில் இருந்தது.
இதனால், அச்சமடைந்த உறவினர்கள் உடனடியாக குட்டையில் இறங்கி தேடியபோது 2 குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அங்கு வந்து, பெண் குழந்தைகளின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளும் இறந்ததை அறிந்த பெற்றோர் கதறி அழுதது, பார்ப்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
