அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘மளமளவென’ பரவிய தீயால்... ‘நிமிடங்களில்’ நடந்து முடிந்த பயங்கரம்... ‘குழந்தைகள்’ உட்பட ‘9 பேர்’ பலியான சோகம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 23, 2019 01:25 PM
அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியின் கிராரி பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் அமர்நாத் ஜா என்பவருக்கு சொந்தமான ஜவுளி குடோன் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த குடோனில் தீ பற்ற, அது நிமிடங்களில் மற்ற இடங்களுக்கும் மளமளவெனப் பரவியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர விபத்தில் 6 மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளும், பெரியவர்கள் 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடோன் உரிமையாளரான அமர்நாத் ஜா வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.