‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 25, 2019 01:27 PM
தனது பிறந்தநாளை சில இளைஞர்கள் அத்துமீறி கொண்டாடியதால் மனமுடைந்த 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் டிகம்ஹர் மாவட்டம் தர்பர்னா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பள்ளிக்கு செல்லும் வழியில் சில இளைஞர்கள் அந்த சிறுமியை கிண்டல் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பிறந்தநாளன்று அந்த இளைஞர் கும்பல் சிறுமியின் கிராமத்திற்கே சென்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அப்போது அவர்கள் சிறுமியின் பெயரை ஸ்பீக்கரில் கூறியும், நடனமாடியும் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். மேலும் கேக்குடன் சென்றிருந்த அந்த கும்பல், சிறுமியின் பிறந்தநாளைக் கொண்டாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்திருந்த சிறுமி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த இளைஞர் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.