‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 30, 2019 04:21 PM

வளைவில் வேகமாக திரும்பிய காரில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Kerala Child Falls Off Moving Car At Turn Saved By Driver

கேரள மாநிலம் மலப்புரம் - கொட்டக்கால் சாலையில் கடந்த 24 ஆம் தேதி கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. பரபரப்பான அந்த சாலையின் வளைவில் கார் திரும்பும்போது, சரியாக மூடப்படாத கதவு திறந்துகொள்ள, காரில் இருந்த குழந்தை ஒன்று தவறி சாலையில் விழுந்துள்ளது.

அந்தக் காரிற்கு பின்னால் வந்த வாகன ஓட்டுநர் அதை சரியான நேரத்தில் கவனித்ததால் சுதாரித்து பிரேக் போட்டுள்ளார். இதையடுத்து காரில் இருந்த நபர் பதறியடித்து ஓடி வந்து குழந்தையை பத்திரமாக தூக்கிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #KERALA #VIDEO #BABY #CAR