'துப்பாக்கியை வைத்துக்கொண்டு'.. 'எம்.எல்.ஏ செய்த பதற வைக்கும் காரியம்'.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 10, 2019 05:19 PM

உத்ராகண்ட்டில் பாஜக எம்.எல்.ஏ கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டபடி,  தனி அறை ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

MLA Pranav Singh seen in a viral video brandishing guns

உத்ரகாண்ட்டில் பாஜக எம்.எல்.ஏ-வான பிரணாவ் சிங் தனது அறையில் இரண்டு பெரிய துப்பாக்கிகளை கைகளில் வைத்துக்கொண்டு, மெலிதாக ஆட்டம் போடுகிறார். அவரைச் சுற்றி சிலர் ஆட்டம் போடுகின்றனர். முன்னதாக பத்திரிகையாளர் ஒருவரை அச்சுறுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவ்வாறு ஆட்டம் போட்டுள்ள பிரணாவ் சிங் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதுபற்றி விசாரிக்கவுள்ளதாகக் குறிப்பிடும் போலீஸார், அந்த துப்பாக்கிகள் உரிமம் பெற்றவையா என்று சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள பாஜக-வின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனில் புலானி, இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, பிரணாவ் சிங் மீது இதுபோன்ற புகார்கள் ஏற்கனவே எழுந்ததால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, உத்ரகாண்ட் யுனிட்டில் பேசவிருப்பதாகவும் அனில் புலானி கூறியுள்ளார்.

Tags : #VIDEOVIRAL #BIZARRE #MLA