'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு? .. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 07, 2019 08:22 PM
கேப்டன் கூல் தோனி, தனது 38வது பிறந்த நாளை தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா தோனியுடனும், இந்திய அணி வீரர்களுடனும் கடந்த சனிக்கிழமை கொண்டாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இலங்கைக்கு எதிரான நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, தோனி கொண்டாடிய இந்த பிறந்த நாளில் கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக தோனி-கேதர் ஜாதவ் இருவரின் பார்ட்னர்ஷிப்தான் பெரும்பாலும் உலகக் கோப்பை போட்டிகளில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, சாக்லேட் கலந்த கிரீமினை முகத்தில் பூசிக்கொண்டு, கேக்கினை அப்பியபடி, தன் செல்ல மகள் ஸிவாவுடன் தோனி டான்ஸ் ஆடி மகிழ்ந்து கொண்டாடும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவும் தோனியும் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோவும் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட பிறகு, பலராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
