'அட மலக் கொரங்கே'... 'விடாமல் துரத்தியதால்'.. 'கட்டிப்புரண்ட நபர்'.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 09, 2019 11:41 AM

உத்திரப் பிரதேசத்தில் நபர் ஒருவரை உணவு வைத்திருப்பதாக நினைத்து குரங்கு ஒன்று, அவரை விரட்டிச் சென்று தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

monkey gang attacks North indian for food, CCTV footage

உத்திரப் பிரதேசத்தின் விருந்தாவன் என்கிற இடத்தைச் சேர்ந்த நிகுன்ஜ் கோயல்,  தனது நண்பரைப் பார்த்துவிட்டு வருவதற்காக கடைத் தெருவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார். ஆனால் அவர் செல்லும் வழியில் அவரையே பார்த்துக் கொண்டிருந்த குரங்குக் கூட்டம், அவரின் வருகில் வருகிறது.

அதன் பின்னர் அந்த குரங்குகள் அவரிடம் உணவுப்பொருட்கள் இருப்பதாக நினைத்து, அவரை விரட்டித் தாக்க முயற்சிக்கின்றன. அந்த குரங்குகள் தங்களது கூர்மையான நகங்களால் அந்த நபர் மீது கீறல் உண்டாக்கியும், அவரைக் கடித்தும் காயத்தை உண்டாக்கியுள்ளன.

இதனையடுத்து, நிகுன்ஜ் கோயல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #MONKEY #VIDEOVIRAL